மதிமுக தலைவர் வைகோவிற்கு திருச்சியில் சிறப்பான வரவேற்பு ..
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சுங்கச்சாவடியில் திருமண விழாவில் பங்கேற்க வருகை தந்த மதிமுக தலைவர் வைகோ, துரை வைகோவிற்கு மதிமுக சார்பில் ஏராளமான தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மதிமுக மாநில மாணவர் அணிச்செயலாளர் பால.சசிகுமார் – பா.திவ்யா இவர்களது திருமணம் இன்று குளித்தலையில் நடைபெற உள்ளது.
இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக தலைவர்” வைகோ மற்றும் துரை வைகோ சென்னையில் இருந்து திருச்சிக்கு சாலை மார்க்கமாக வருகை தந்தனர்.
இந்நிலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட மதிமுக சார்பில் மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.