காதல் விவகாரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையத்தில் காதல் விவகாரத்தில் தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே பூணாம்பாளையம் ராசி நகரை சேர்ந்தவர் 21 வயதான ஜெயப்பிரியா. இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் விக்னேஷ் என்ற பையனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தொடர்ந்து காதலுடன் பேசி வந்த ஜெயப்பிரியாவை அவரது தாய் சந்திரா கண்டித்துள்ளார். இதனால் மணமடைந்த ஜெயப்பிரியா நேற்று வீட்டில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது தாய் சந்திரா கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.