கோடை கால தண்ணீர் பந்தல்: திமுக மத்திய மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்

0 282
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் கோடை கால தண்ணீர் பந்தலை திமுக மத்திய மாவட்ட செயலாளர் இன்று திறந்து வைத்தார்.

திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.இராமஜெயம் நினைவாக இலால்குடி ரவுண்டானா பகுதியில்
கோடை கால தண்ணீர் பந்தலை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர் குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலால்குடி திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆங்கரை சண்முகநாதன், மணக்கால் சக்திவேல், நத்தம் பெரியய்யா, நகர தலைவர் துரை மாணிக்கம், துணைத்தலைவர் இராஜ்மோகன், இலால்குடி ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொறியாளர் பெருவை முருகவேல் நிகழ்ச்சியை ஓருங்கிணைத்தார். நிகழ்வின் முடிவில் மாந்துரை முரளி நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.