தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்

0 258
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கூடலூர் கிராமத்தில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீத்தொண்டு வார விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீத்தொண்டு வார விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 20 ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தீத்தொண்டு வார விழாவை முன்னிட்டு கூடலூர் கிராமத்தில் உள்ள கடைவீதி மற்றும் புள்ளம்பாடி திருச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் புள்ளம்பாடி தீயணைப்பு பொருப்பு நிலைய அலுவலர் பாரதி தலைமையில் தீயணைப்பு நிலைய போக்குவரத்து திராவிடன் வீரர்கள் அருண்ராஜ்,பிரகாஷ், மோகன் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் முதலுதவி தொடர்பான செயல் விளக்கத்தை செய்து காட்டினர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இந்நிகழ்வில் பொதுமக்கள் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.