அரச மரத்தில் அம்மன் கண்கள் போல் தெரிந்ததால் குவிந்த பக்தர்கள்

0 516
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள பி மேட்டூர் பகுதியில் உள்ள அய்யாற்றங்கரை பகுதியில் வேம்பு மற்றும் அரச மரத்துடன் விநாயகர் சிலை அமைந்துள்ளது இங்குள்ள அரசமரத்தில் கிளை ஒன்றில் அம்மனின் கண்கள் தெரிவதாக வந்த செய்தி காட்டு தீ போல் பரவியது
அம்மாவாசை முன்னிட்டு அரச மரத்தில் கண்கள் தெரிந்ததால் பொதுமக்களிடையே பக்தி பரவசம் பெருகியது மேலும் பி. மேட்டூரை சுற்றியுள்ள
விஸ்வாம்பாள் சமுத்திரம் பாலகிருஷ்ணம்பட்டி கோட்டப்பாளையம் கோம்பை .தங்க நகர் பச்ச பெருமாள் பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அரச மரத்தில் தெரியும் கண்களை பயப்பக்தி உடன் வணங்கி சென்றனர் சித்திரை மாதம் என்பதால் இது அம்மனுக்கு உகந்த காலம் என்று பக்தர்கள் தெரிவித்தனர். அரசமரத்து கிளையில் அம்மன் கண்கள் தெரிவதாக வந்த செய்தி காட்டுதீ போல் பரவியதால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Leave A Reply

Your email address will not be published.