காவிரி ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
திருச்சி தெற்கு உக்கடை அரியமங்கலம் புங்கிலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவருடைய மகள் 6 வயதான ரிஷானா தஸ்ரின். நேற்று விடுமுறை என்பதால் இவர்கள் குடும்பத்துடன் முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு வந்துள்ளனர்.அப்போது மாலை 4 மணி அளவில் காவிரி ஆற்றில் 21வது மதகு அருகில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதமாக நீரில் மூழ்கி மூழ்கி மாயமானார்.இதனையடுத்து சுமார் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் சிறுமியை சடலமாக மீட்டனர்.
இது குறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் சிறுமி நீரில் மூழ்கி இறந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.