அதவத்தூரில் மேற்கூரையுடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளம் : காணொளி காட்சி மூலம் திறப்பு
திருச்சி, ஏப்.25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிகாட்சி மூலம் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்து, புதிய வட்ட செயல்முறை கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டம், அதவத்தூரில் 7800 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல்சேமிப்பு தளம் திறப்பு விழா நடைபெற்றது. அதவத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டார். இதில் திருவரங்கம் வருவாய் கோட்டாட்சியர் (பொ) முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பாலமுருகன், செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் ராஜி, திருவரங்கம் வட்டாட்சியர் சிவக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.