பொன்னியின் செல்வன் -2 படக்குழுவினர் திருச்சி வருகை
பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் ப்ரோமோஷன்காக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் உள்ள NIT கல்லுரி வளாகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் மணிரத்தினம் , நடிகர் விக்ரம் , நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் தனி விமானம் மூலம் திருச்சி வந்து அடைந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கார் மூலம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஓய்வெடுத்த பிறகு மாலை அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறக்கூடிய NIT கல்லூரிக்கு செல்கின்றனர்.