ரெங்கராஜன் நரசிம்மன் அவதூறு கருத்துகளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் பதில்

0 482
Stalin trichy visit

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர் யூ டியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு அரசு, இந்து அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர், பணியாளர்கள் குறித்து அவதூறான கருத்துக் வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்து ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர், செயல் அலுவலர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் பணியாளர்ம. சீனிவாசன், கோயில் மகாஜனம் என்பவருக்கு பூஜை முறைகள் தொடர்பாக விளக்கம் கேட்டு வழங்கப்பட்ட இவ்வலுவலக ந.க.எண். 4460/ 1432 /பி5-4 நாள் 20.04.2023 கடிதத்தை மேற்படி பணியாளரிடமிருந்து தவறான வழியில் தாங்கள் பெற்றுக்கொண்டு தமிழ்நாடு அரசையும் திருக்கோயில் நிர்வாகத்தையும் அரசு அலுவலர்களான தற்போதைய இணைஆணையர்/ செயல் அலுவலர் செ. மாரிமுத்து மற்றும் முன்னாள் இணைஆணையர்/செயல் அலுவலர்கள் .மா.கவிதா மற்றும்பொ. ஜெயராமன் ஆகியோர்களையும் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர்  வேணுசீனிவாசன், திருக்கோயில் உள்துறை கண்காணிப்பாளரையும் மற்றும் நிர்வாக பிரிவு எழுத்தரையும் அவமதிக்கும் நோக்கில் பொய்யான கருத்துக்களையும் அவமரியாதையாகவும், அவதூறாகவும் தரமில்லாத சொற்களாலும் இகழ்ச்சியாகவும் கோப ஆவேசத்துடனும் பேசி சமூக வலைதளங்களில் சுமார் 25 நிமிட வீடியோ வெளியிட்டு (https: // www. youtube.com/watch?r=9soy 79xG2sE youtube channel name:- Our Temples Our Pride Our Right சித்திரை 8, 5125 21.04.2023) பொதுமக்களின் பார்வைக்கு தமிழ்நாடு அரசைப் பற்றி  அவதூறான கருத்துக்களை பரப்பியுள்ளீர்கள்.

  1. எனவே, தாங்கள் உடனடியாக இவ்வாறு பேசியது தவறு என்று குறிப்பிட்டு மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிட்டு இனிமேல் இது போன்ற தவறுகள் செய்யமாட்டேன் என்று உறுதியளித்தும் மேற்படி தவறான வீடியோவை பார்த்த நபர்களை கண்டறிந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த விஷயத்தை தெரிவித்தும் அதன் விபரத்தை இவ்வலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் திருக்கோயில் அலுவலகத்தில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடிதங்களை திருட்டுத்தனமாகவும் தவறான வழியிலும் பெற்று தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் சட்ட முறைகளின்படி பெற்று சட்டப்பூர்வ வழிகளில் ஆலோசனைகள் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிக்கொள்ளவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    உண்மையான பெருமாள் பக்தர் ஸ்ரீவைஷ்ணவர் இவ்வாறு தரக்குறைவான சொற்களை பயன்படுத்தி கோப ஆவேசத்துடன் பேசமாட்டார் என்றும் தங்களுக்கு நினைவூட்டப்படுகிறது என்று கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.