மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

0 423
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள மணக்காடுபகுதியில் மின் மோட்டார் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார்.

புள்ளம்பாடி அருகே மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதான ராஜேஷ்.இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கிணற்று அருகே மின்மோட்டார் பொருத்தம் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டவர் மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார். இது குறித்த தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.