இளைஞரை தாக்கி நகை, செல்போன் பறிப்பு

0 305
Stalin trichy visit

 

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் மகாலட்சுமி நகர், சல்மான் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 33). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார் இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாயகம் திரும்பிய இவர் சல்மான் அப்பார்ட்மெண்ட் அப்பார்ட்மெண்ட்ஸில் வசித்து வந்தார்.

இந்நிலையில் செல்வம் திருவானைக்கோவில் சோதனை சாவடி அழகிரி புறம் டாஸ்மாக் பகுதியில் நடந்து சென்றார். அப்போது இரண்டு மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அவரது முகத்தில் சரமாரியாக தாக்கி விட்டு செல்வம் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் செய்யும் மற்றும் ஒரு விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை திருடி விட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து செல்வம் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

Leave A Reply

Your email address will not be published.