சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து

0 224
Stalin trichy visit

சாத்தமங்கலத்தில் அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து. காயம் இன்றி பயணிகள் உயிர்த்தப்பினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சாத்தமங்கலம் அரண்மனைமேடு பகுதியில் அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து லால்குடி கொப்பாவளி வழியாக ஆனந்திமேடு கிராமத்திற்கு  பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தமங்கலம் அரண்மனை மேடு பகுதியில் பேருந்து  சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். சம்பவம் குறித்து லால்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.