மாவட்ட அளவில் கபடி போட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 392
Stalin trichy visit

மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள ஆதவன் கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி டாஸ் போட்டு துவக்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள ஆதவன் கலை அறிவியல் கல்லூரி சார்பாக மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் கபடி போட்டி இன்று நடைபெற்றது.
இதன் துவக்க விழாவில் கல்லூரியின் செயலாளர் சூர்யா சுப்பிரமணியன் வரவேற்புரை வழங்கினார் .
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு கபடி போட்டியை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்த கபடி போட்டியில் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரியின் தலைவர் மாணிக்கம், பொருளாளர் தங்கபாண்டியன், அறங்காவலர் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.