திருமங்கலம் சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு உலகநாயகி அம்மாள் சமேத அருள்மிகு சாமவேதீஸ்வரர் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு உலகநாயகி அம்பாள் சமேத அருள்மிகு சாம வேதீஸ்வரர் ஆலயம். இக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மகா தீபாதரனை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் நித்தியா தலைமையில் கோவில் பணியாளர்கள், கோவில் குருக்கள்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.