ஒரத்தநாடு இளைஞர்கள் துறையூரில் சடலங்களாக மீட்கப்பட்டதின் பின்னணி…

0 619
Stalin trichy visit

தஞ்சையில் காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்களின் ஏற்பாட்டில் கொலை செய்யப்பட்டு திருச்சி துறையூர் அருகே பாலத்தின் கீழ் தூக்கி வீசப்பட்ட இரண்டு ஆண் சடலம் – இரண்டு சடலத்தையும் துறையூர் அருகே வெவ்வேறு இடங்களில் வீசி சென்றது அம்பலம் …

துறையூர் அருகே நேற்று இரண்டு இடங்களில் கொலை செய்யப்பட்டு உடலில் பலத்த காயங்களுடன் வீசப்பட்டிருந்த இரண்டு உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டது.

திருச்சி துறையூர் கொத்தம்பட்டி குண்டார் பாலம் அருகில் 40 வயது மதிப்பு தக்க வாலிபரின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது.

இதே போல் முசிறி துறையூர் சாலையில் ஜம்புநாதபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பொண்ணு சங்கம்பட்டி கிராமத்தில் ஓடத்தின் கீழ் மற்றொரு ஆண் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது – இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் நேற்று விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் : துறையூர் அருகே இறந்தவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரத்தநாடு பகுதியில் உள்ள நெடுவகோட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் என்பவரது மகன் பிரபு(42) என்பதும் ஜம்பனாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இறந்து கிடந்தவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவகோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகன் ஸ்டாலின்(44) என்பதும் தெரியவந்தது.

இருவரையும் ஒரத்தநாடு பகுதியில் கொலை செய்து துறையூர் பகுதியில் குற்றவாளிகள் வீசி சென்றது தெரிய வந்தது மேலும் கொலை சம்பவமாக ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஹரி (22) சூர்யா (24) ஆகிய இரண்டு பேரையும் ஒரத்தநாடு போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் பிரபு என்பவர் கார் ஓட்டுநர் என்பதும் திருமணம் செய்து விவகாரத்து ஆகி தனியாக வசித்து வருவதாகவும் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் – இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் பிரபுவைக் கண்டித்ததாகவும் தெரிகிறது – இந்நிலையில் பெண்ணிடம் பழக்கத்தை விட மறுத்த பிரபுவையும் அவரது நண்பர் ஸ்டாலினையும் அவரது உறவினர்கள் லாவகமாக கூட்டிச் சென்று தஞ்சாவூர் பகுதியில் கொலை செய்து பிணத்தை திருச்சி மாவட்டம் துறையூரில் வீசி சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.