திருச்சியில்  2 இடங்களில்  என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

0 305
Stalin trichy visit

திருச்சியில்  2 இடங்களில்  என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை

தமிழ்நாட்டில் , இன்று அதிகாலை முதல்  என்.ஐ. ஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகளில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் ஓட்டேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில்  தேசிய புலனாய்வு  முகமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களாக கருதப்படும் நபர்களின் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோன்று மதுரை, தேனி மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் தொடர்பில் உள்ளார்களா என விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சியில் என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை:

சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த தஞ்சையை சேர்ந்த  முகமது அசாப் என்பரை, தடுத்து நிறுத்தி விமான நிலையத்தில் வைத்தே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.