கிணற்றில் தவறி விழுந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
கல்லக்குடியில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாய். தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள கல்லக்குடியில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாய். புள்ளம் தீயணைப்பு வீரர்கள் நாயை பத்திரமாக மீட்டனர்.
கல்லக்குடியில் உள்ள அம்பாள் டாக்கீஸ் அருகே வசிப்பவர் அண்ணா மேரி. இவர் வீட்டின் அருகே உள்ள சுமார் 30 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது. இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் வீரர்கள் அமுதகுமார், ரமேஷ் குமார், அசாருதீன், கனகராஜ், தரணிதரன், மோகன் உள்ளிட்ட வீரர்கள் கிணற்றில் இறங்கி நாயை உயிருடன் பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு நாயை பத்திரமாக மீட்ட புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.