ஸ்ரீரங்கத்தில் நடந்த தி.மு.க அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

0 205
Stalin trichy visit

திமுக அரசின் 2-ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது.

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக அரசின் முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களின் அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கம் சாத்தார வீதி பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார் இரண்டாவது வட்ட கழக செயலாளர் ரங்கன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் திமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் விஜய் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட செயலாளர்கள் குமரேசன், பன்னீர்செல்வம், பாலாமணி, கேபிள் கார்த்திக் மற்றும் திராவிட கழக முன்னேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.