காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் மனுக்களின் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம்

0 240
Stalin trichy visit

திருச்சி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களிடமிருந்து முதல்வரின் தனிபிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரிடம் கொடுத்த புகார் மனுக்களின் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம்

தமிழக காவல்துறை இயக்குநர் முனைவர் C.சைலேந்திரபாபு  உத்தரவின்பேரில், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர்M.சத்திய பிரியா, பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில்  தமிழக முதலமைச்சரின் தனிபிரிவில் இணையவழியில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைதீர்க்கும் நாளில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களின் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம் (சிறப்பு பெட்டிசன் மேளா) இன்று (10.05.23)ந்தேதி புதன்கிழமை திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இம்முகாமில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் தலைமையகம், வடக்கு மற்றும் தெற்கு, காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்டம் & ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் மேற்கண்ட 45 மனுக்களில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்தும், அதில் 26 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மேல்விசாரணையில் உள்ளது.

மேலும், கடந்த ஐந்து மாதங்களில் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் கொடுக்கப்பட்ட 523 மனுக்களில், 437 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களின் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்ட 173 மனுக்களில் 126 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் அளித்த 653 மனுக்களில் 402 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதே போன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் பெறப்பட்ட ”முதல்வரின் முகவரி” மனுக்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.