பெருவளப்பூரில் மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

0 426
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் பெருவளப்பூரில்
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் சார்பில் கொடியேற்றும் விழாவும், மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

பெருவளப்பூரில்
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் சார்பில் கொடியேற்றும் விழாவும், மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டமும் புள்ளம்பாடி வடக்கு
ஒன்றிய தலைவர் முத்தரசு தலைமையிலும்
மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன்,மாவட்ட மேற்பார்வையாளர், லோகிதாசன்,மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட பொருளாளர் ரவீந்திரன் ஒன்றிய பார்வையாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிலையில் பெருவளப்பூரில் பிஜேபி கொடி ஏற்றக்கூடாது என ஒரு அமைப்பினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். பல்வேறு எதிர்ப்புகளை மீறி பெருவளப்பூரில் பிஜேபி கொடியை ஏற்றினார். அதனைத் தொடர்ந்து
மத்திய பா.ஜ.க அரசின் சாதனைகள் குறித்து நிர்வாகிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் சபரி,மாவட்ட செயலாளர் சீனிவாசன்,மாவட்ட செயலாளர் திருமதி. மகேஸ்வரி,ஒன்றியபொதுச் செயலாளர்கள் சந்தோஷ்,தர்மராஜ்,ஒன்றிய பொருளாளர் கார்த்தி,ஒன்றிய துணைத் தலைவர்கள். திருஞானசம்பந்தம்,ராதாகிருஷ்ணன் முருகானந்தம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயபிரகாஷ்,சுரேஷ் மற்றும் கனகராஜ்,
ராமசுப்பிரமணியன், முத்தழகன்,சந்திரன், அண்ணாதுரை, விஜயகுமார், இந்து முன்னணி சரவணன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பெருவளப்பூர் சுகதேவ், அருண், இளையராஜா, ஆனந்தன் ஆகியோருக்கு நிர்வாகிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.