சிறப்பு குழந்தைகளின் அன்னையர்கள் கவுரவிப்பு
அன்னையர் தினத்தில் சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களை கெளரவபடுத்தப்பட்டார்கள்
அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஃ பவுண்டேஷன் சார்பில் நிறுவனர் கிருஷ்ணர் தலைமையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, எஸ்.சூரியா, சுந்தர்ராஜன், முன்னிலையில் கொண்டாட்டப்பட்டது.
தாயிடம் அன்பு மற்றும் பாசமழை பொழிய இது தனித்துவமான நாளாகும். தாயாரின் கடின உழைப்பு, தியாகம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பு ஆகிய அனைத்தையும் இந்நாளில் கௌரவிக்கலாம்.
தாய்மார்களின் தியாகத்தை போற்றவும், அவர்களை கௌரவிக்கும் விதமாகவும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தாய்மார்களை மகிழ்விக்கும் விதமாக , சிறப்பு (மனநல பாதித்த) குழந்தைகளை வளர்க்கும்
தாய்மார்களிடம் அன்னையர் தினத்தில் ஆசிர்வாதம் பெறுவதை சிறப்புக்குரிய நடவடிக்கையாக கருதப்பட்டது.
திருச்சி கீழவயலூர் ஸ்ரீ கோசாலாயில் சிறப்பு (மனநல பாதித்த) குழந்தைகளின் அன்னையர்களை கௌரவப்படுத்தினர்கள்.
நிகழ்விற்கு துறையூர் தாய் கோவில் நிறுவனர் சுரேஷ், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், சிறகுகள் மனநல பேற்றோர்கள் சங்கம் நிறுவனர் சுந்தரம், முதுகு தண்டுவடம் சங்க செயலாளர் ராஜ்சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு அன்னையர்கள் உடன் சேர்ந்து விளையாட்டுகளில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
அன்னையர்கள் சுமார் 100 பேருக்கு மேல் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்