அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு தரிசன திட்டம் : பக்தர்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

0 515
Stalin trichy visit

அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டசபையில் அறிவித்தபடி,

தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களில் ஒன்றான சமயபுரம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தினமும் மாலை 3 முதல் 4 மணிவரை 500 பக்தர்களை மட்டும் ரூ.300/- கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனமாக தனியாக அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பக்தர்கள் தங்கள் கருத்துக்களை jceotry_25704.hrce@tn.gov.in  (or) symmariamman@gmail.com என்ற இ மெயில் மூலமோ, அல்லது இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் என்ற முகவரிக்கோ 15.06.2023க்குள் தெரிவிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.