அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சட்டசபையில் அறிவித்தபடி,
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வருகையுள்ள முக்கிய கோயில்களில் ஒன்றான சமயபுரம்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் தினமும் மாலை 3 முதல் 4 மணிவரை 500 பக்தர்களை மட்டும் ரூ.300/- கட்டணத்தில் இடை நிறுத்த தரிசனமாக தனியாக அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பக்தர்கள் தங்கள் கருத்துக்களை jceotry_25704.hrce@tn.gov.in (or) symmariamman@gmail.com என்ற இ மெயில் மூலமோ, அல்லது இணை ஆணையர்/செயல் அலுவலர் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் என்ற முகவரிக்கோ 15.06.2023க்குள் தெரிவிக்கலாம்.