மாநகராட்சிப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணி

0 340
Stalin trichy visit

திருச்சி, மே 29 திருச்சி மாநகராட்சி மண்டல் 5, வார்டு எண் 55க்குட்பட்ட பிராட்டியூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.85 கோடி மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து திட்டப்பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்திரபாண்டியன், ஸ்டாலின்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.