உலக பட்டினி தினத்தையொட்டி ஏழைகளுக்கு உணவு வழங்கல்

0 366
Stalin trichy visit

உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரி செய்ய வலியுறுத்தியும் வருடா வருடம் மே 28 அன்று உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.
தொண்டாமுத்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று ( 28/ 5/ 2023 ) மதியம் 12.30 மணிக்கு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனை முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு மதிய உணவு, ரொட்டி, பழம் வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்க தொண்டாமுத்தூர் ஒன்றிய தலைவர் சி. வெள்ளைச்சாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி ஒன்றிய பொறுப்பாளர் நவீன் குமார் தலைமையில் கௌரவ ஆலோசகர் சுரேஷ் மதிய உணவு, ரொட்டி, பழம் வழங்கினார்.
ஒன்றிய துணைத் தலைவர் ஹரிஹரன், நிர்வாகி சின்னா, வேணுகோபால், ஒன்றிய நிர்வாகியும், செய்தி தொடர்பாளருமான சி. வருண் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.