அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் : பா.ஜ.க.வினர் கைது

0 382
Stalin trichy visit

திருச்சி, மே 30 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன் தனபால் மணி கந்தசாமி ஆகிய நால்வரையும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அவர்களை வலுவான சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையுடன் மேலும் நேர்மையாக அரசு அதிகாரிகள் அச்சமின்றி பணி செய்ய வேண்டும் என்றும் மணல் கொள்ளையர்களை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும் என்றும் கூறி துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் செய்த பாஜகவினரை துறையூர் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் துறையூர் நகர தலைவர் சரவணன் மாவட்ட துணைத்தலைவர் நித்தியா ஜெயக்குமார் சதீஷ்குமார் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் எஸ்பி ராஜேந்திரன் மாநில பிரச்சார பிரிவு சம்பத்குமார் அரசு பிரிவு நிதிஷ்குமார் மங்கையர்க்கரசி சத்யா சாந்தி மற்றும் துறையூர் கிழக்கு மண்டல் பாலக்குமார் மேற்கு மண்டல் சரவண குமார் உப்பிலியபுரம் தெற்கு மண்டல் முருகேசன் பிரச்சார பிரிவு பழனிவேல் மாவட்ட கூட்டுறவு துணைத் தலைவர் தனபால் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.