உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா

0 455
Stalin trichy visit

உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகும். திருமங்கையாழ்வரால் பாடல் பெற்றதும் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் திருக்கரம்பனூர் ஆதிமாபுரம் பிச்சாண்டார்கோவில் என பிரசித்தி பெற்றதும் மும்மூர்த்திகளும்,முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.

இந்நிலையில் உத்தமர் கோயிலில் வைகாசி விசாக தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 24 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் பூத,ஷேஷ,யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலாவும் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடைப்பெற்றது. கடந்த 30 ந்தேதி அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய பார்வதி சமேத பிச்சாடனாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைப்பெற்றது.

முக்கிய நிகழ்வான வைகாசி விசாக தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.தேர் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து நிலையை அடைந்தது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயி
ல் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.