திருச்சி,ஜுன் 5 திருச்சி மத்திய சிறை வளாகத்தில், தையல் ஆசிரியை ஒருவர், ‘போக்சோ’ தண்டனைகைதியால் கொடூரமாக மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சிறைகளில் தண்டனைக் கைதியாக உள்ளவர்கள் படிப்பதற்காக, திருச்சி மத்திய சிறையில், ஐ.டி.ஐ., செயல்படுகிறது. கோவை மத்திய சிறையில் போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி(25) என்பவர் உட்பட 35 தண்டனை கைதிகள் திருச்சி மத்திய சிறையில் தங்கி, தையல் பயிற்சி படிக்கின்றனர். இந்த தண்டனை கைதிகளுக்கு சுமார் 45 வயதுடைய தையல் ஆசிரியை ஒருவர் தையல் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி காலையில் நடந்த வகுப்பிற்கு பின், பகல் 11:45 மணிக்கு கைதிகள் சாப்பிட சென்றனர். அப்போது கைதி திருமூர்த்தி சாப்பாட்டை முடித்து முன்னதாகவே வகுப்பறைக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த ஆசிரியையின் வாயில் துணியை அடைத்து, சத்தம் போட விடாமல் செய்தார். பின்னர் ஆவேசமாக முத்தம் கொடுத்து, உதடுகளை கடித்தார். மேலும், அவரது நெஞ்சுப்பகுதியிலும், முகத்திலும் கடித்து, நகங்களாலும் காயங்களை ஏற்படுத்தினார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, திருமூர்த்தியிடம் இருந்து விடுபட்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து, ‘குத்தி விடுவேன்’ என எச்சரித்தார். இதையடுத்து கைதி திருமூர்த்தி, ஆசிரியையை விட்டு, குளியல் அறையில் ஒளிந்து கொண்டார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட ஆசிரியை சிறைத்துறை அதிகாரிகளிடம், புகார் கொடுக்கச் சென்ற போது, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், ‘இதனால் உங்களுக்குத் தான் கெட்ட பெயர், அசிங்கம். அப்படியே விட்டு விடுங்கள்’ என மிரட்டல் தொனியில் கூறினார். மேலும் அங்குள்ள பெண் அதிகாரியும் ஆசிரியைக்கு ஆறுதல் கூறாமல், புகார் கொடுக்கக் கூடாது என்பது போல மிரட்டினார். இதனால், மனமுடைந்த ஆசிரியை, அங்கிருந்து சென்று விட்டார். திருச்சியில் மத்திய சிறையில் ஆசிரியை மானபங்கப்படுத்திய கைதி மீது நடவடிக்கை எடுக்காமல், சிறைத்துறை அதிகாரிகளை ஆசிரியை மிரட்டி சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post