தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி

0 282
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 6 திருச்சி மாவட்டம் லால்குடி சந்தைப்பேட்டையில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. சிறந்த தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் வழங்கினார். லால்குடி நகராட்சியில் தமிழ்நாடு அரசு உத்தரவுபடியும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அறிவுரையுன் பேரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் லால்குடி நகராட்சியில் தூய்மை பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி சந்தைப் பேட்டை வாரச்சந்தையில் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு லால்குடி நகர மன்ற தலைவர் துரை மாணிக்கம் தலைமையில் ஆணையர் குமார், துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் வெங்கட்ராமன், ஓவர்சியர் பிரசாந்த், நகர மன்ற உறுப்பினர்கள் சங்கர், ராதிகா முருகன், விஜயலட்சுமி, ராஜேந்திரன், செந்தில், மணி, சாரதா, மதியழகன் நகராட்சி நகராட்சி பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், லயன் கிளப் நிர்வாகிகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், சிலம்பாட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் முழக்கங்களை எழுப்பு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.


பேரணி வாரச்சந்தை தொடங்கி ரவுண்டானா வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் குப்பைகளை சேகரித்து பராமரித்து வந்த திருமாவளவன், ஸ்கை பவுன்டேசன் நிறுவனர் முத்தமிழ் செல்வன் மற்றும் தூய்மை பணியாளர்கள் சாவித்திரி, வனிதா, சங்கீதா ,மாரிமுத்து ஆகியோருக்கு சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மேலும் கருப்பன் குளம் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். துப்புரவு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, களப்பணி உதவியாளர் தமிழ்மொழி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.