திருச்சிக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு: அமைச்சர் அறிக்கை

0 840
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 7 திருச்சிக்கு வருகைத்தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சிக்கு நாளை (ஜுன்8) வருகை தரும் கழகத் தலைவர் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் இரவு 8 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் என கழக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் மாநில மாவட்ட மாநகர கழக நிர்வாகிகள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி ஒன்றிய நகர பேரூர் வட்ட வார்டு கிளை கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழகத் தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.