மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வாகனங்கள் வழங்கல்

0 391
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 7 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 8 இருக்கைகளுடன் கூடிய சிறப்பு வாகனங்கள் மற்றும் கலைஞர் நகற்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மின்கல வாகனங்களின் பயன்பாட்டினைத் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்து, 60 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா வாகனங்களையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, துணைமேயர் திவ்யா, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.