புதிய நியாயவிலைக்கடை திறப்பு
திருச்சி, ஜுன் 8 திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சோலையம்மாபட்டி கிராமத்தில் பகுதி நேர நியாயவிலை கடையை மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது இன்று திறந்து வைத்து முதல் விற்பணையை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மருங்காபுரி ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரன், மமக அமைப்பு செயலாளர் காதர் மைதீன், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.