திருச்சி ஐ.டி.ஐ.யில் புதிய கட்டடம் காணொளி காட்சி மூலம் திறப்பு

0 306
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 8 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.34.73 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையம் 4.0 கட்டடத்தினை இன்று திறந்து வைத்தார். திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டு கட்டடத்தினை பார்வையிட்டனர். இந்நிகழ்வில் திருவெறும்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பரமேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.