உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு

0 208
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி டவுன்ஹால் மேல்நிலைப்பள்ளி மற்றும் இ.பி.ரோடு மாநகராட்சி மேல்நிலை பள்ளிகளில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதில் சமுதாயத்தின் பங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு டவுன்ஹால் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தேவி நிர்மலா, மாநகராட்சி மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் இராமகிருஷ்ணன் ஆகியோரின் தலைமை வகித்தனர். திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். மேலும் 18 வயதுக்குட்பட்ட குழந்தை வளரிளம் பருவத் தொழிலாளர்களையும் வேலைக்கு அனுப்புவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புவது குழந்தைகள் மீதான வன்முறையாகும். குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதில் மாணவர்கள் மற்றும் சமுதாயத்தின் பங்கு குறித்தும் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 10 9 8 குறித்து விழிப்புணர்வு வழங்கி உறுப்பினர் முனைவர் பிரபு தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி மாணவர், ஆசிரியர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அஜீம் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். உதவி ஆய்வாளர் வசந்தா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சாதிக்பட்சா, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.