கண்டுகொள்ளாத கார்ப்பரேஷன்; களத்தில் இறங்கிய காந்தி மார்க்கெட் வியாபாரிகள்!

0 514
Stalin trichy visit

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பெரிய கடை வீதிக்கு செல்லும் நுழைவாயில் பகுதி முழுவதும் சாலை மிகவும் சேதமடைந்த காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி வரை சென்ற பேருந்து காந்தி மார்க்கெட் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கிக் பொதுமக்களும் பெண்களும் இறங்கி தள்ளி அவல நிலையும் ஏற்பட்டது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும், சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து குண்டும் குழியுமான சாலை தாங்களாகவே முன்வந்து மண் கொட்டி சாலையை சீரமைத்து உள்ளனர்.

மேலும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் மற்றும் சாலையில் செல்வோர் கோரிக்கை வைத்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.