கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

0 485
Stalin trichy visit

திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் அய்மான் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு I & II(National Service Scheme UnitsI & II) இணைந்து கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அய்மான் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் அய்மான் கல்லூரி இயக்குனர் ஷாகுல் ஹமீது, கல்லூரி முதல்வர் சுஹாசினி எர்னெஸ்ட் ஆகியோர் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். இதில் திருச்சி மாநகராட்சி, மாவட்ட பொது சுகாதாரபணித்துறை செவிலியர் கௌசல்யா வாணி கலந்து கொண்டு முகாமில் 38 அய்மான் கல்லூரி மாணவிகள் மற்றும் 6 ஊர் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்புடனும் சமூக இடைவெளியுடனும் கோவிட் ஷீல்ட் தடுப்பூசி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.