ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் நாளை பரிசளிப்பு விழா

0 260
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் இராம்ஜிநகர் காவல் நிலையம் 33 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் துறை சார்பாக கடந்த 04.04.2023 ஆம் தேதி முதல் 10.04.2023 ஆம் தேதி வரை கவிதை, கட்டுரை, ஓவியம் மற்றும் கபாடி போட்டிகள் நடத்தப்பட்டன. காவல் துறையில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத சூழ்நிலையினாலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்றதால் மேற்படி போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவியர் அதிகபடியாக கலந்துக்கொண்டு பரிசு பெற்றுள்ளதால் நேடியாக பரிசு வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு பரிசு அளிப்பு விழா தேதிகள் குறிப்பிடபடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. தற்போது பரிசு அளிப்பு விழாவானது 16.06.2023 ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு இராம்ஜிநகர் காவல் நிலைய வளாகத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முன்னிலையில் நடைபெற உள்ளது. அதனால் மேற்படி போட்டிகளில் கலந்துக்கொண்டவர்கள் மற்றும் பொது மக்கள் தவறாமல் விழாவில் கலந்துக்கொண்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றினை பெற்று விழாவை சிறப்பித்து தருமாறு
ராம்ஜிநகர் காவல் ஆய்வாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.