விஷ பூச்சி கடித்து குழந்தை உயிரிழப்பு

0 371
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 21 திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சோபனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும் ஹரிசுதன் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது வீட்டின் ஓரத்தில் இருந்த ஓட்டையில் கையை விட்டு விளையாடி உள்ளது. அப்போது திடீரென குழந்தை அலறியுள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஏதேனும் விஷ பூச்சிகள் கடித்திருக்கலாம் என நினைத்து உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்த உப்பியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் . வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை திடீரென இறந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.