மினிபேருந்துகளால் போக்குவரத்து நெருக்கடி

0 512
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 20 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட், லெனிஸ்ட்) விடுதலை மணப்பாறை நகரகுழு. மணப்பாறை நகர செயலாளர் பாலு, மணப்பாறை வட்டார போக்குவரத்து அலுவலர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே மணப்பாறையில் இருந்து வீரப்பூர் செல்ல கூடிய மினி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி சென்று வருகின்றனர். மேற்படி மணப்பாறையில் இருந்து வீரப்பூர் செல்லக்கூடிய மினி பேருந்துகள் வெள்ளக்கல் மார்க்கெட் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி சென்றது. தற்சமயம் வீரப்பூர் செல்லக்கூடிய அனைத்து மினி பேருந்துகளும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் பேருந்தை நிறுத்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். மேற்படி மினி பேருந்துகள் எந்த இடத்தில் புறப்பட்டு எந்த இடத்தில் சேர்ந்து நிற்க வேண்டும் என்ற அனுமதி அவர்களுக்கு உண்டு அனுமதிக்கு எதிராக அனுமதி இல்லாத பல இடங்களில் தாறுமாறாக பேருந்து நிலையம் எதிரே மினி பேருந்துகளை நிறுத்தி வைத்து குறைந்தது 1 மணி நேரம் 2 மணி நேரமும் பொது மக்களை ஏற்றி வருகின்றனர். இதனால் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்களின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தக் கூடிய விதமாக தனியார் மினி பேருந்துகள் செயல்படுகிறது. மேலும் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே நிற்கும் மினி பேருந்துகள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூராகவும் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தும் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வருகின்றனர். மேற்படி மினி பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிற்க வேண்டும் என்றும் இவ்வாறு இல்லையெனில் மினி பேருந்துகளுக்கு நகர பகுதியில் ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் போக்குவரத்துதுறை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.