திருச்சி -காரைக்கால் பயணிகள் ரயில் நேரம் மாற்றம்

0 5,378
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 21 திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி ஜங்சனில் இருந்து காரைக்காலுக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06880) தினமும் காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 3 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக அடுத்த மாதம் (ஜூலை) 3- ஆம் தேதி முதல் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி காலை 9.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு பொன்மலை, திருவெறும்பூர், சோளகம்பட்டி வழியாக காலை 10.56 மணிக்கு தஞ்சைக்கு செல்கிறது. பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு குடிகாடு, சாலியமங்கலம் வழியாக திருவாரூருக்கு மதியம் 12.16 மணிக்கு செல்கிறது. பின்னர் நாகப்பட்டினம் வழியாக காரைக்காலுக்கு மதியம் 2.05 மணிக்கு சென்றடைகிறது. இதே போல் காரைக்காலில் இருந்து தஞ்சை வரை செல்லும் வண்டி எண் 06457 முன்பதிவில்லா ரயில் காரைக்காலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு தஞ்சைக்கு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.