சரிந்த நிலையில் சிவலிங்கம் மீட்பு
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தும்மல் கிராமத்தில் பழமையான சிவலிங்கம் 6 தலைமுறையாக வயல் வெளியில் சரிந்த நிலையில் இருந்தது.
கோவை அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்களால் சிவலிங்கம் இருந்த இடத்திலேயே பீடம் அமைக்கப்பட்டது.
நந்தியம்பெருமான் தலைப்பகுதி சேதமடைந்த நிலையில் இருந்ததால் உடனடியாக பெரம்பலூரில் இருந்து நந்தி மற்றும் பலிபீடம் வரவழைக்கப்பட்டு பிரதிட்டை செய்து, காளத்திநாதர் எனும் பெயரிட்டு வழிபாடு செய்யப்பட்டது.
விரைவில் கோவை அரன் பணி அறக்கட்டளை மூலம் மேற்கூரை அமைக்கப்படவுள்ளது.