திருச்சி மாவட்டத்தில் 16 மதுக்கடைகள் மூடல்

0 444
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 23 திருச்சி மாவட்டத்தில் மாநகரில் 12 கடைகள், புறநகரில் 4 கடைகள் உள்பட மொத்தம் 16 டாஸ்மாக் கடைகள் நேற்று நிரந்தரமாக மூடப்பட்டன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவே மீதம் இருந்த மதுபாட்டில்கள் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சில கடைகளில் நேற்று காலை மதுபாட்டில்கள் அனைத்தும் குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் சாலை தென்றல் நகர் (கடை எண்:10202), பாபு ரோடு (கடை எண்:10219), பெரிய கடைவீதி (கடை எண்:10249), கரூர் புறவழிச்சாலை பைபாஸ் ரோடு அண்ணாமலை நகர் (கடை எண்:10253), கல்கண்டார்கோட்டை தங்கேஸ்வரி நகர் வடக்கு (கடை எண்:10271), எடமலைப்பட்டிபுதூர் (கடை எண்:10314), வரகனேரி பிச்சை நகர் (கடை எண்:10513), மத்திய பஸ் நிலையம் அருகில் மெக்டொனால்டுஸ் சாலை (கடை எண்:10522), தேவதானம் (கடை எண்:10559), உறையூர் கோணக்கரை ரோடு (கடை எண்:10536), திண்டுக்கல் பிதான சாலை கருமண்டபம் (கடை எண்:10302), காந்தி மார்க்கெட் (கடை எண்:10209) பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. இதுபோல் புறநகர் பகுதிகளில், திருவெறும்பூர் நவல்பட்டு சாலை (கடை எண்:10376), மணப்பாறை செவலூர் (கடை எண்:10325), கல்லக்குடி (கடை எண்:10337), பூவாளூர் கிழக்கு (கடை எண்:10510) பகுதியில் உள்ள கடைகளும் நேற்று திறக்கப்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.