தென்னக ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை குழு கூட்டம்

0 247
Stalin trichy visit

இன்று 23-06-2023 தென்னக ரயில்வே பயனாளர்கள் ஆலோசனை குழு கூட்டம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் த.இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக அனைத்து பிளாட்பாரத்திலும் பேட்டரியால் இயங்கும் ஊர்திணை இயக்கப்பட வேண்டும் அதில் அவர்கள் ஏறுவதற்கு வசதியாக சாய்தள படிக்கட்டுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் மிக முக்கியமாக திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தினந்தோறும் பகலில் புதிய ரயில் சேவையினை உடனடியாக இயக்கப்பட வேண்டுமென்றும் திருச்சி ரயில் சந்திப்பில் உள்ள ஸ்கேலேட்டர் பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட வேண்டும் ரயில் நிலையங்களில் உள்ள கோரிக்கைகளை அடங்கிய மனுவினை திருச்சியில் ரயில்வே கோட்ட பொது மேலாளர் அவர்களிடம் வழங்கினார் அதற்கு ரயில்வே கோட்ட மேலாளர் பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.