எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு
திருச்சி, ஜுன் 27 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், வளாக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் வெண்கல திருவுருவ சிலை திறப்பு விழா 06.07.2023 வியாழக்கிழமை அன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து எழுச்சி உரை ஆற்ற உள்ளார்கள். மேற்கண்ட நிகழ்ச்சிக்கான முதல் அழைப்பிதழை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் வழங்கினார்.