ஸ்ரீமஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி

0 407
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் வீர தேவேந்திர குல வேளாளர் தெருவில் எழுந்தருவிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகின்ற 28;6;23 புதன்கிழமை நடைபெற இருப்பதால் வேள்விகள் செய்வதற்கு சிவாச்சாரியார்கள் தலைமையில் காவேரி கங்கை பம்பை போன்ற புனித ஆறுகளில் இருந்து நீர் கொண்டுவரப்பட்டு உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து யானை மீது வைத்து ஊர்வலமாக யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வரந்தனர். புனித நீர் கடைவீதி வழியாக கோட்டை வீதி சுற்றி யாகசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து தூப தீபம் காட்டும் நிகழ்ச்சி யாகசாலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கிராமப் பொதுமக்கள் ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.