சீரமைக்கப்பட்ட சமத்துவபுரம் : காணொளி காட்சி மூலம் திறப்பு

0 355
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 28 திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், காட்டுக்குளத்தில் சீரமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முசிறி வட்டம், காட்டுக்குளம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று சமத்துவபுரத்தில் சீரமைக்கப்பட்டுள்ள விடுகளை பார்வையிட்டார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், தியாகராஜன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.