அமலாக்கத்துறையால் தி.மு.க. அமைச்சர்களுக்கு ஜுரம் : எடப்பாடி பழனிசாமி

0 316
Stalin trichy visit

திருச்சி ஜூலை 07

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் நிறுவனத்தின் அனுமதியுடன் சுமார் 4000 சதுர அடியில் புதிதாக 10லட்சம் மதிப்பீட்டில் 56கிலோ எடையுள்ள 7அடி உயரம் கொண்ட இந்த முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில் எம்ஜிஆர் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டிருந்தது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்ஜிஆர் சிலையை
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
நேற்று (ஜூலை 6) திறந்து வைத்தார்.
தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில் அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சரித்திரம் படைத்த தலைவர்கள். மக்களுக்காக வாழ்ந்தார்கள். மக்களுக்காகவே மறைந்தார்கள். அதனால் தான் தற்போதும் அவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே பணியாற்றிய தலைவர்கள்தான் எம்ஜிஆர், ஜெயலலிதா.
எங்களது தலைவர்களுக்கு வாரிசு கிடையாது. நாமும், தமிழக மக்களும் தான் அவர்களுக்கு வாரிசு. அதேபோல் தமிழகத்தில் ஒரு கட்சி இருக்கிறது. அதன் தலைவராக இருந்த கருணாநிதி தனது மக்களுக்காகவே உழைத்தார். தன்னுடைய மக்களுக்காகவே அவர் வாழ்நாள்
தனக்கு பின்னால் குடும்ப வாரிசுகள் வரவேண்டும் என்பதற்காகவே கட்சியை நடத்தினார். அதிமுகவில் சாதாரண தொண்டருக்கு கூட உச்சப் பதவி கிடைக்கக்கூடிய ஜனநாயக கட்சியாகும். ஆனால் திமுகவில் பணத்துக்கு திமுக பணத்துக்காகவே கட்சி நடத்தப்படுகிறது. பணம் படைத்தவர்கள் தான் அதிகாரம், பதவிக்கு வர முடியும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக கூட வர முடியும்.
தனக்கு பின்னால் குடும்ப வாரிசுகள் வரவேண்டும் என்பதற்காகவே கட்சியை நடத்தினார். அதிமுகவில் சாதாரண தொண்டருக்கு கூட உச்சப் பதவி கிடைக்கக்கூடிய ஜனநாயக கட்சியாகும். ஆனால் திமுகவில் பணத்துக்கு திமுக பணத்துக்காகவே கட்சி நடத்தப்படுகிறது. பணம் படைத்தவர்கள் தான் அதிகாரம், பதவிக்கு வர முடியும். அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சராக கூட வர முடியும்.
அதனால் எந்த சக்தியாலும் அதிமுகவை உடைக்கவோ, அளிக்கவோ முடியாது. உயிரோட்டம் உள்ள ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவிற்கு எதிராக வீட்டு மை ஸ்டாலின் பி டீம் உருவாக்கினார். ஓ பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் சேர்ந்து திருச்சியில் மாநாடு நடத்தினார்கள். ஆனால் நாம் தற்போது எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவை மாநாடு போல் நடத்தி உள்ளோம். ஆகையால் எத்தகைய பி டீம்கள் உருவாக்கினாலும் அதிமுகவை அழிக்க முடியாது. தமிழகத்தில் மளிகை பொருட்கள் விலைவாசி உயர்ந்து விட்டது. இதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதைப் பற்றி எல்லாம் அறிந்திடாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். பொம்மை முதல்வராக அவர் போட்டோ ஷூட் மட்டுமே நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஒரு ஆட்சியை உருவாக்குவோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். தமிழகத்தையே அவரால் காப்பாற்ற முடியவில்லை. எங்கே மத்தியில் சென்று காப்பாற்ற போகிறார். திமுக வினருக்கு அமைச்சர்களுக்கு தற்போது ஜுரம் வந்துவிட்டது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை வந்து விடுவார்களோ என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருப்பதால் அவர்களுக்கு தூக்கம் போய்விட்டது. பாரதிய ஜனதா கட்சியின் அடிமை, மத்திய அரசின் அடிமை என்றெல்லாம் அதிமுக நிர்வாகிகளை திமுகவினர் கூறி வந்தனர். ஆனால் தற்போது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அனைத்து அமைச்சர்களும் மருத்துவமனையில் பதற்றத்துடனும், பயத்துடனும் இருந்ததை காண முடிந்தது. அவர் வாக்குமூலம் கொடுத்துவிடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டது. செந்தில் பாலாஜி வாய் திறந்தால் அனைவரும் சிறைக்கு தான் செல்ல வேண்டும். 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து செந்தில் பாலாஜி வாய் திறந்தால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். கடந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக தான் உள்ளது. மக்களைப் பற்றி கவலைப்படாத ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகள் பல கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால் 10 ஆண்டு கால ஆட்சியில் திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை என்று அமைச்சர் நேரு பச்சை பொய் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, முனுசாமி, பரஞ்சோதி, விஜயபாஸ்கர், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், , முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.