திருச்சி விமான நிலையத்தில் ரூ.79 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி, ஜூலை8 திருச்சி விமான நிலையத்திற்கு நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 3 விமான பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 8 பயணிகளை தனியாக அழைத்து சென்று அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்து ரூ. 79.12 லட்சம் மதிப்பிலான 1,338 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் இந்த தங்கத்தை கொண்டு வந்தவர்கள் வாசனை திரவிய பாட்டில் மற்றும் பெண்களுக்கான கைப்பை ஆகியவற்றில் மறைத்து தகடு வடிவிலும், குச்சி வடிவிலும் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.