மரக்கன்றுகள் நடுவதில் மாணவர்கள் ஆர்வம்
திருச்சி, ஜூலை13 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டி பகுதியில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் தேசிய நெஞ்சாலை ஆணையம் மற்றும் சுங்கச்சாலை இணைந்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதி மற்றும் சாலையோரங்களில் 1000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் பணியை மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி., ராமநாதன் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவ- மாணவிகள் ஆர்வமாக மரக்கன்றுகளை நடும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டனர். தொடர்ந்து மரக்கன்றுகள் சாலையோரமும், சாலையின் மையப்பகுதியிலும் நடப்பட்டது. இதில் தேசிய நெடுஞ்சாலை மேலாளர் ராகுல், எம்.எஸ்.வி., டீம் லீடர் குருசாமி, தலைமை ஆசிரியர் ஜோசப் தாமஸ், திட்ட மேலாளர் செந்தில்குமரன், ஆசிரியர் சேசுராஜா மற்றும்புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.