கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் உயிருடன் மீட்பு

0 247
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 22  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் கிராமத்தில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண்ணை புள்ளம்பாடி தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

லால்குடி அருகே பெருவளப்பூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் 21 வயதான வர்ஷா. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக வர்ஷா தவறி விழுந்தார். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சென்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து புள்ளம்பாடி தீயணைப்பு  மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நிலை அலுவலர் போக்குவரத்து மகேந்திரன், சிறப்பு நிலைய அலுவலர் பாரதி,யாக ஒ திராவிடன் மற்றும் வீரர்கள் ராபர்ட் கென்னடி, கனகராஜ், அருண்ராஜ், பிரகாஷ் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கயிறு மற்றும் லைபாய் உதவியுடன் இளம்பெண்ணை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இளம்பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு இளம் பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை கிராம மக்கள் பாராட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.